கன்னிகா பரமேஸ்வரி விஸ்வரூப பொற்பாதம்: பழநியில் சிறப்பு பூஜை
ADDED :3594 days ago
பழநி,: ஆந்திரா மாநிலத்திலுள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் விஸ்வரூப பொற்பாதங்களுக்கு பழநியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.கோதாவரி மாவட்டம் பெனுகொண்டாவிலுள்ள வைஸ்ய குலதெய்வம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன். இங்கு கோயில் கட்டும்பணி நடக்கிறது. அதில் 102 அடிஉயரத்தில் ஐம்பொன்னால் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.அச்சிலையின் பொற்பாதங்கள் மட்டும் ஏழரைஅடி அகலம், மூன்றரை அடி உயரத்துடன், 1.55 டன் எடை கொண்டது. இப்பாதங்கள் ஒவ்வொரு ஊராக எடுத்துச்செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.நேற்று கோவையிலிருந்து பழநிக்கு வந்த விஸ்வரூப பொற்பாதங்களை பழநி ஆர்ய வைஸ்ய சமாஜம் குழுவினர் வரவேற்றனர். பட்டத்துவிநாயகர் கோயிலிருந்து ஊர்வலமாக எடுத்துவந்து வாசவி மகாலில் வைத்து அபிஷேகம், குங்குமார்ச்சனை, புஷ்பார்ச்சனை, தம்பதி பூஜைகளுடன் மகாதீபாராதனை நடந்தது.