பக்த ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு
ADDED :3594 days ago
விழுப்புரம்: அரசமங்கலம் கிராமத்தில், உலக நன்மை வேண்டி பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவையொட்டி, மூலவர் ஆஞ்சநேயருக்கு சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேக ஆராதனை, சஹஸ்தர நாம அர்ச்சனைகள் நடந்தது. இதில், ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு அகல் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மூலவர் ஆஞ்சநேயர் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை வெ ங்கடேஷ்பாபு, கிருஷ்ணராஜ் பட்டாச்சாரியார்கள் செய்தனர்.