உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஷ்ணு துர்க்கை கோவில் மகா கும்பாபிஷேகம்

விஷ்ணு துர்க்கை கோவில் மகா கும்பாபிஷேகம்

அவலூர்பேட்டை: மேல்மலையனூர் அடுத்த வடவெட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் கும்பாபி÷ ஷகம் நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 12 ம் தேதி காலை 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்யாக வாசனம், கோ பூஜை, கணபதி ஹோமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை யும், மாலையில் வாஸ்து சாந்தி, பிரவேசபலி, யாக சாலை பூஜை நடந்தது. நேற்று காலையில் விசேஷ ஹோமம், தீபாராதனை, யாத்ராதானத்தை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 9:30 மணிக்கு விநாயகர், விஷ்ணு துர்க்கை, முருகன், பொன்னியம்மன், சிம்மம் பலிபீடம் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் மகா கும்பாபிஷேகம்நடந்தது. விழாவில் ஊராட்சி தலைவர் பூங்காவனம், நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !