உலகளந்த பெருமாள் கோவிலில் 21ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா.
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா வரும் 21ம் தேதி நடக்கிறது. நடுநாட்டுத் திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 21ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. இதனையடுத்து கடந்த 11ம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதனையடுத்து தினசரி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வீதி புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 20ம் தேதி மாலை பெருமாள் மோகனி அலங்காரத்தில் எழுந்தருள்கிறார், திருமங்கை ஆழ்வார் மோட்சம் நடக்கிறது. 21ம் தேதி அதிகாலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள், ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனைத் தொடர்ந்து இராப்பத்து உற்சவம் துவங்குகிறது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகத்தினர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.