சுகவனேஸ்வரர் கோவிலில் 11,000 ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு வழங்கல்!
ADDED :3584 days ago
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், இன்று பஞ்சமுக ருத்ர த்ரீ சதீ விழா நடக்கிறது. இதையொட்டி, 11 ஆயிரம் ருத்ராட்சங்கள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சேலத்தில் பழமைவாய்ந்த சுகவனேஸ்வரர் கோவிலில், கார்த்திகையில், கடந்த, மூன்று திங்கட்கிழமைகளிலும், விசேஷ அபி?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டு, ருத்ர த்ரீ சதீ பாராயணம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கார்த்திகை மாத கடைசி சோமவாரமான இன்று, பஞ்சமுக ருத்ர த்ரீ சதீ விழா நடைபெறுகிறது. இதில் ஸ்வாமிக்கு, 11 ஆயிரம் ருத்ராட்சங்கள் சாத்துப்படி செய்யப்பட்டு, ஐந்து சிவாச்சாரியார்களால், ருத்ர மந்திரம் ஜெபிக்கப்படுகிறது. இரவு, 7 மணியளவில், வேத மந்திரங்கள் நிறைவு பெற்றவுடன், சாத்துப்படி செய்யப்பட்ட, 11 ஆயிரம் ருத்ராட்சங்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இரவு அன்னதானம் நடைபெறும்.