உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவில் தேருக்கு புதிய சக்கரம்

வரதராஜ பெருமாள் கோவில் தேருக்கு புதிய சக்கரம்

திருவண்ணாமலை: ஆரணி டவுன் வரதராஜ பெருமாள் கோவில் தேர் சக்கரம், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெல் நிறுவனம் தயாரித்துள்ளது. அதை தேரில் பொருத்தும் பணி நடந்து வருகிறது. ஆரணி டவுனில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலின் தேர் சக்கரம் பழுதடைந்ததால், கடந்த, 2 ஆண்டுகளாக ஸ்வாமி வீதி உலா நடக்காமல் இருந்தது. இந்நிலையில், பழுதடைந்துள்ள தேரை புதுப்பிக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை மூலம், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில், 4 சக்கரங்கள் மற்றும் இணைப்பு தூண்கள் தயாரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, சக்கரங்கள் மற்றும் இணைப்பு தூண்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தேரில் சக்கரங்களை பொருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. இதனால், இந்த ஆண்டு திருத்தேர் வீதி உலா நடைபெறும் என, பக்தர்கள் ஆவலுடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !