உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவிரிக்கரை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மகரஜோதி விழா

காவிரிக்கரை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மகரஜோதி விழா

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் ஸ்ரீ ஐயப்பா சேவா நிறுவன ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு சபரிமலையில் நடப்பது போல் கார்த்திகை மாதம், ஒன்றாம் தேதி முதல், தை மாதம், 1ம் தேதிவரை, மண்டல பூஜை, மகரஜோதி தரிசன விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை முதல் தேதி, புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியுடன் மண்டல பூஜை விழா தொடங்கியது. தினமும் கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாரதனை, நடக்கிறது. வரும், 27ம் தேதி காலை, 9 மணிக்கு, 108 சங்காபிஷேகம், திருவிளக்கு உலா, புஷ்ப பல்லக்கில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடக்கிறது. ஜனவரி, 1ம் தேதி காலை, 9 மணிக்கு மகரஜோதி விழா கொடியேற்றம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !