இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் உதவி மையம் திறப்பு
சபரிமலை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் உதவி மையம் சன்னிதானத்தில் திறக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் பெரிய நடைப்பந்தலில் உள்ள திருவிழா கட்டுப்பாடு அலுவகத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தமிழக பக்தர்கள் மொழி ரீதியாக சிரமப்படும் போது அவர்களுக்கு தேவையான தகவல்களை இங்கு பெற முடியும். குமரி மாவட்ட தேவசம்போர்டில் பணிபுரியும் அதிகாரிகள் சிவராமச்சந்திரன், சிவகுமார், ஈஸ்வரபிரசாத் ஆகியோர் இங்கு பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் இவர்கள் பணியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். உறுப்பினர் அஜய், ஊழியர்கள் தங்குவதற்காக அறை சாவியை வழங்கினார். இதில் சபரிமலை நிர்வாக அதிகாரி ரேணுகோபால், திருவிழா கட்டுப்பாடு அதிகாரி கிருஷ்ணகுமார், பி.ஆர்.ஓ. முரளி, துணை பொறியாளர் வசந்த், குமரி மாவட்ட தேவசம்போர்டு அதிகாரிகள் சிவகுமார், ஈஸ்வரபிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக பக்தர்கள் உதவி மைய மொபைல் எண்கள்: 98942 52632, 99949 48299, 99940 45032