அய்யப்பன் கோவிலில் நாளை திருவிழா
ADDED :3583 days ago
அன்னுார்: அன்னுார் அய்யப்பன் கோவில், திருவிழா நாளை துவங்குகிறது. அன்னுார் அய்யப்பன் கோவிலில், 46ம் ஆண்டு அய்யப்பன் திருவிழா, நாளை (15ம் தேதி) மாலை வாஸ்து பூஜையுடன் துவங்குகிறது. 16ம் தேதி அதிகாலை, ஹோம பூஜை துவங்குகிறது. காலை 5:45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மாலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 17ம் தேதி மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 18ம் தேதி அதிகாலையில் கணபதி ஹோமமும், அய்யப்பனுருக்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகமும் நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. 19ம் தேதி மதியம் 1:00 மணிக்கு கோவிலிலிருந்து, யானை, செண்டை மேளம், ஜமாப் குழு இசையுடன், புலி வாகனத்தில் அய்யப்ப சுவாமி திருவீதியுலா துவங்கி முக்கிய வீதிகள் வழியாக செல்கிறது. இரவு சிறப்பு வழிபாடு நடக்கிறது.