உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

சுகவனேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, 1,008 சங்காபிஷேகம் மற்றும் பஞ்சமுக ருத்ர த்ரீ சதி விழா நடந்தது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில், 108 சங்குகள் வைத்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, அபிஷேகம் மற்றும் ருத்ர த்ரீ சதீ பாராயணம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டு வந்தது. கார்த்திகை மாத கடைசி சோமவாரமான நேற்று, 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில், 1,008 வலம்புரி சங்குகளில் தீர்த்தம் நிரப்பப்பட்டு, பூஜிக்கப்பட்டு, ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, சுவாமிக்கு, 11 ஆயிரம் ருத்ராட்சம் சாத்துபடி செய்யப்பட்டு, ஐந்து சிவாச்சாரியார்களால், ருத்ர மந்திரம் ஜெபிக்கப்பட்டது. விழா நிறைவில், சாத்துப்படி செய்யப்பட்ட ருத்ராட்சங்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !