கபாலீஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக ருத்ர யாகம்
ADDED :3584 days ago
ஈரோடு: உலக நன்மைக்காகவும், பேரழிவு நடக்காமல் இருக்கவும் வேண்டி, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ருத்ர யாகம் நேற்று நடந்தது. காலை 7, மணிக்கு முதற்கால பூஜை, 9, மணிக்கு, ருத்ர ஹோமம், பூர்ணஹூதி, தீபாராதனை, மாலை 4, மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மஹா தீபாரதனையும் நடந்தது. இதில் 51, அர்ச்சகர்கள் பங்கேற்று, 108, வகையான திரவியங்களை கொண்டு, மஹா ருத்ர ஹோமத்தை நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.