உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடியில் 1008 சங்காபிஷேகம்

இருக்கன்குடியில் 1008 சங்காபிஷேகம்

சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு அம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது. கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி தலைமை வகித்தார். அதிகாலை 5 மணி முதல் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. மதியம் ஒரு மணிக்கு அம்மனுக்கு சங்காபிஷேகம் செய்து சிறப்பு, அலங்காரம் பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை சோமவாரத்தினை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது. ரகு பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7 மணிக்குமேல் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினர்.

சிவகாசி:சிவகாசி சிவன்கோயிலில் கார்த்திகை மாதம் கடைசி சோமவராத்தை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது. பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி முருகன், பட்டர் மணி செய்திருந்தனர்.

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு விசாலாட்சி உடணுறை காசிவிஸ்வநாதர் கோயிலில் கார்த்திகை சோமவார வழிபாடு நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்களுடன் திருமஞ்சனம் நடந்தது. மாலையில் கோயில் மைய மண்டபத்தில் 108 சங்குகள் பூரணகும்பம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூஜிக்கப்பட்ட நீராலும், 18 வகை அபிஷேகப்பொருட்களாலும் சிறப்பு அபிஷேகமும், சிவபுராண பாராயணமும், பெண்களின் பஜனை வழிபாடும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !