உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லியங்குணம் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை

கொல்லியங்குணம் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை

மயிலம்: உலக நன்மைக்காக கொல்லியங்குணம் விநாயகர் கோவிலில் விளக்கு பூஜையை, மயிலம் ஆதீனம் துவக்கி வைத்தார். மயிலம் அடுத்த கொல்லியங்குணம் விநாயகர் கோவிலில் உலக நன்மைக்காக குத்துவிளக்கு பூஜையை முன்னிட்டு மூலவருக்கு நறுமணப்பொருட்களினால், வழிபாடு நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கினர். மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் பூஜைக்கு தேவையான பொருட்களை வழங்கி, ஆசியுரை வழங்கினாார். கோவில் வளாகத்தில் மாலை 6:00 மணிக்கு 500 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை வழிபாடு செய்தனர். இரவு 9:00 மணிக்கு அய்யப்ப பக்தர்கள் சார்பில், படி பூஜை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கொல்லியங்குணம் கிராம பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !