பான் பெருமாள் கோவில் மார்கழி உற்சவம் துவக்கம்
ஹலசூரு: ஹலசூரு பஜார் தெரு, பான் பெருமாள் கோவிலில், மார்கழி மாத உற்சவம் நாளை முதல், ஜன., 15ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. ஹலசூரு, பான் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு, நாளை முதல், ஜன., 15ம் தேதி வரை, தினமும் அதிகாலை, 5:30 - 6:30 மணி வரை திருப்பாவை பாராயணம், இரவு, 7:00 - 8:30 மணி வரை, உ.வே.பிரகால பாலாஜி சுவாமிகளின், திருப்பாவை சொற்பொழிவு நடக்கிறது.வரும், 18ம் தேதி மாலை, நாச்சியார் திருக்கோலம்; 21ம் தேதி அதிகாலை, வைகுண்ட ஏகாதசி, மாலையில், வைரமுடி உற்சவம்; 25ம் தேதி மாலை சத்யநாராயண பூஜை; 26ம் தேதி மாலை, ராமானுஜருக்கு ஆருத்ரா அபிஷேகம்; 30ம் தேதி மாலை, ஆழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வரும், 2016 ஜன., 1ம் தேதி, புத்தாண்டு சிறப்பு பூஜை; ஜன., 9, மாலை, சுதர்சன ஹோமம், 11ம் தேதி, காலை, ஆண்டாள் கூடாரை வெல்லும் உற்சவம்; 15ல், திருப்பாவை சாத்து முறை சங்கராந்தி நடக்கிறது. பிப்., 2ல், ஆண்டாள் திருக்கல்யாண ஆனந்த ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு, 94811 84833, 94492 55373 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, கோவில் அர்ச்சகர் ஏகமூர்த்தி தெரிவித்தார்.