உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சோமவார 108 சங்காபிஷேகம்!

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சோமவார 108 சங்காபிஷேகம்!

விருத்தாசலம்: கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. விருத்தாசலம் வி ருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், சுவாமி சன்னதி முன் புனிதநீர் கலசம், 108 சங்குகள் வைத்து சிறப்பு யாகம்   நடந்தது. 6:00 மணிக்கு மேல் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், மாவு, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம்,  108 சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலை ஏகநாயகர் கோவிலில் மாலை  5:30 மணிக்கு 108 சங்கு கள் வைத்து சிறப்பு பூஜை செய்து, சுவாமிக்கு சங்காபிஷேகம் நடந்தது. பின்னர், அண்ணாமலையார் அலங்காரத்தில்  ஏகநாயகர் அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !