ஜெகநாதர் ரத யாத்திரை வைபவம்
ADDED :3585 days ago
ஈரோடு: ஒடிசா மாநிலம் புரி நகரில் ஆண்டுதோறும் உலக பிரசித்தி பெற்ற ஜெகநாதர் ரத யாத்திரை வெகு விமர்சையாக நடக்கும். உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொள்வர். இது போன்ற விழாவை காண முடியாதவர்கள், ஏழை எளிய மக்கள் வசதிக்காக, புரி ஜெகநாதரை ஈரோடு மக்கள் தரிசிக்கும் வகையிலும், கோவை இஸ்கான் அமைப்பு சார்பில், டிசம்பர், 26ம் தேதி, ஈரோட்டில் ஜெகநாதர் ரத யாத்திரை வைபவம் நடக்கிறது. அன்று மதியம், 3 மணிக்கு செங்குந்தர் பிரைமரி பள்ளியில் தொடங்கும் ரத யாத்திரை, பிரப்ரோடு, ஜி.ஹெச், பெருந்துறை ரோடு வழியாக செங்கோடம்பள்ளம் குருசாமிமண்டபத்தில் நிறைவு பெறுகிறது. இதை தொடர்ந்து, அங்கு பஜனை, கீர்த்தனை, உபன்யாசம் நடக்கிறது. புரி ஜெகநாதரை வழிபட முடியாத முதியவர்கள், பொதுமக்கள், இந்த வைபத்தில் கலந்து கொள்ளலாம்.