முருங்கப்பாக்கம் கோவிலில் மார்கழி மகா உற்சவம் நாளை துவக்கம்
ADDED :3584 days ago
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் ராமாநுஜ பஜனை மடம் கோவிலில் மார்கழி மகா உற்சவம் நாளை (17ம் தேதி) துவங் குகிறது.முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமாநுஜ பஜனைமட கோவிலில், மார்கழி மாத உற்சவம் நாளை 17ம் தேதி காலை 6:00 மணிக்கு சிறப்பு பஜனையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, தினமும் காலை 6:00 மணிக்கு பஜனை ஊர்வலம் நடக்கிறது.வரும் 21ம் தேதி வைகுந்த ஏகாதசியும், ஜனவரி 9ம் தேதி அனுமந்ஜெயந்தி விழா நடக்கிறது. 11ம் தேதி பின்ன மரச் சேவை, இரவு 7:00 மணிக்கு மாப் பிளை அழைப்பும், 12ம் தேதி ஆண்டாள் திருக்கல்யாண வைப வம் நடக்கிறது. 13ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.