சுவாமி சன்னதி தரிசனம் கட்டணத்துக்கு எதிர்ப்பு
ADDED :3642 days ago
மதுரை: மதுரையில் இந்து ஆலய பாதுகாப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில பொதுச் செயலாளர் பி.சுந்தரவடிவேல் தலைமை வகித்தார்.மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரி, கோயில் நிர்வாகத்திடம் நாளை மனு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. பா.ஜ., பிரசாரக்குழு மாநில பொறுப்பாளர் சசிராமன், இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் அசோகன், தர்மரக்ஷன் சமிதி மாவட்ட இணை அமைப்பாளர் முத்துக்கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.