ஏகாதசியை முன்னிட்டு நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி
ADDED :3585 days ago
புதுச்சேரி: லாஸ்பேட்டை, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வரும் 21ம் தேதி, நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. புதுச்சேரி, லாஸ்பேட்டையில் திரவுபதியம்மன் பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரும் 21ம் தேதி, வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, காஞ்சி ஆஸ்தான வித்வான் ஸந்த் முரளிதாஸ் பாகவதரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. 21ம் தேதி இரவு 7:00 மணி முதல், 10:00 வரை நடக்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஸ்ரீபாண்டுரங்கன் பஜன் சமாஜ் நிர்வாகிகள் செய்துள்ளனர்.