உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோவிலில் கொடியேற்று விழா

ஐயப்பன் கோவிலில் கொடியேற்று விழா

குமாரபாளையம்: குமாரபாளையம், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவ விழா நேற்று துவங்கியது. நேற்று காலை, 8 மணியளவில் கோவில் வளாகத்தில் கொடியேற்று விழா நடந்தது. ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இன்று காலை 6.00 மணிக்கு கணபதி பூஜை, உச்ச பூஜை , பஞ்ச காவ்யம், பகவதி சேவை, கலச பூஜை ஆகியவை நடைபெற உள்ளன. வரும், 22ம் தேதி இரவு, 8.30 மணிக்கு பள்ளி வேட்டை மற்றும் சயனவாசம் நடக்கிறது. 23ம் தேதி மதியம், 12 மணிக்கு கூடுதுறையில் ஸ்வாமிக்கு ஆராட்டு விழா, மதியம், 1 மணிக்கு கலச பூஜை செய்து கொடியிறக்கம் நடைபெற உள்ளது. 24ம் தேதி ஐயப்பனுக்கு அபிஷேகம் நடக்கிறது. 25ம் தேதி மாலை, 6 மணிக்கு ஐயப்பன் கோவில் டிரஸ்ட் சார்பில் மண்டலபூஜை, சிறப்பு பஜனை, அன்னதானம் ஆகியவை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !