சாமித்தோப்பு பதியில் திருக்கல்யாண விழா
ADDED :3581 days ago
நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் கார்த்திகை மாத திருஏடு வாசிப்பு விழா கடந்த நான்காம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 18-ம் தேதி 15-ம் நாள் விழாவில் அய்யா வைகுண்ட சாமிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது. இதையொட்டி அதிகாலை நடை திறந்து பணிவிடை, வாகனபவனி நடக்கிறது. மதியம் உச்சிப்படிப்பு, மாலை ஆறு மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு ஆகியவை நடக்கிறது. இதன் முடிவில் பக்தர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழங்கள், பலகாரம், இனிப்பு, அன்னம் ஆகியவை வழங்கப்படுகிறது.