சன்னிதானம் வந்த 26 வயது பெண்
சபரிமலை:பம்பையில் சன்னிதானம் வந்த 26 வயது பெண் திருப்பி அனுப்பப்பட்டார்.பத்து முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சன்னிதானம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இைத கண்காணிக்க பெண் போலீசார் மற்றும் தேவசம்போர்டு பெண் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வயதில் சந்தேகம் ஏற்பட்டால் அந்த பெண் இவர்கள் பாதுகாப்பில் தங்க வைக்கப்படுவார். உண்மையிலேயே 50 வயதை கடந்தும் இளமை தோற்றம் இருந்தால் அவர்கள் வயது சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.இப்படி கெடுபிடி இருக்க, ஒரு பெண் சன்னிதானம் அருகே வந்த போது தனிப்பிரிவு போலீசார் அவரை பிடித்து சன்னிதானம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது அடையாள அட்டையை பரிசோதித்தனர். ஆதார் கார்டில் பெண் என்றும், டிரைவிங் லைசென்சில் ஆண் என்றும் இருந்தது. மதுரையை சேர்ந்த பிரியா என்றுகுறிப்பிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால் இவர் திருநங்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.போலீசார் கூடுதல் விசாரணைக்கு செல்லாமல் பம்பைக்கு அவரை திருப்பி அனுப்பி வைத்தனர்.