குன்னுார் ஐயப்பன் கோவிலில் மகோற்சவ விழா!
ADDED :3640 days ago
குன்னுார்: குன்னுார் வெலிங்டன் பஜார் ஐயப்பன் கோவிலில், 29வது ஆண்டு மகோற்சவ விழா
நடந்தது.
குன்னுார் வெலிங்டன் பஜார் ஐயப்பன் கோவிலில், 29வது ஆண்டு மகோற்சவ விழா கடந்த,
13ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி ஒசட்டி சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில்
இருந்து பால் குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, நாள்தோறும் ஐயப்பனுக்கு காலை உஷபூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, அத்தாழ பூஜை, அலங்காரம் ஆகியவை நடந்து வருகிறது. வரும், 27ல், காலை 6:00 மணி முதல் 10:30 மணி வரையிலும், மாலை,5:00 மணி முதல் 8:30 மணி வரையிலும் மண்டல பூஜை நடக்கிறது. ஜனவரி,15ல் தேதி மகர ஜோதி சிறப்பு பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மண்டல மகோற்சவ குழுவினர் செய்து வருகின்றனர்.