ஐயப்ப பக்தர்களின் வருகையால் நவபாஷாண கடற்கரை களைகட்டுகிறது
தேவிபட்டினம்: ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் நவபாஷாண கடற்கரை களைகட்டி வருகிறது. தேவிப்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டியுள்ள நவ பாஷாண நவக்கிரக கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தோஷ நிவர்த்தி பரிகார பூஜைகள் செய்வது வழக்கம். இவர்களுடன் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித் துள்ளதால் கடந்த ஒருவாரமாக நவபாஷாண நவக் கிரக கோயில், கடற்கரை பகுதி களைகட்டி வருகிறது. பரிகார பூஜைக்காக வரும் பக்தர்கள் மட்டும் கடலில் இறங்கி நவக்கிரகத்தை சுற்றி வழிபடு கின்றனர். ஐயப்ப பக்தர்கள் நடை மேடை வழியாக சுற்றிவந்து நவக் கிரகத்தை வழிபட்டு செல்கின்றனர். இந்துசமய அறநிலையத்துறை வசம் வந்தபின்னர் பரிகார பூஜை செய்பவர்கள் ஆடைகளை நவ பாஷாண கடலில் வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடைகள் மாற்றுவதற்கு தனிஇடம் ஒதுக்கப் பட்டுள்ளது.