உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் சிந்தனை: வார்த்தைகளை கடைபிடிப்போம்!

கிறிஸ்துமஸ் சிந்தனை: வார்த்தைகளை கடைபிடிப்போம்!

இங்கிலாந்து ராணி ஒரு வியாபாரியை அழைத்தார். “நீர் என் துாதுவராக வெளிநாடு செல்ல வேண்டும்,”என்றார். “நான் இங்கு இல்லாவிட்டால், என் வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ள யாருமில்லையே,” என்றார் வியாபாரி.“அந்தப்பணியை நான் பார்த்துக் கொள்கிறேன். கவலை வேண்டாம்,” என்றார் ராணி. வியாபாரி கிளம்பி விட்டார். திரும்ப வந்து பார்த்தபோது, தானே வியாபாரத்தைக் கவனித்திருந்தாலும், இந்தளவுக்கு சம்பாதித்திருக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டார். இதேபோல் தான் இயேசுகிறிஸ்து, “முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் பாருங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்,” என்றார்.ஆம்..ராணியின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்ட வியாபாரி எப்படி சம்பாதித்தாரோ, அதுபோல் தேவனின் நீதிமொழிகளைக் கேட்டு நடப்போருக்கு, நாம் நினைக்காத அளவுக்கு பலன் கிடைக்கும். எனக்கு இன்னின்ன கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்தால், நான் உமக்கு இன்னின்ன காணிக்கை தருகிறேன் என்ற ரீதியில் நமது ஜெபம் அமையக்கூடாது. தேவனின் வார்த்தைகளைக் கடைபிடித்து, அவர் தருவதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !