உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

விக்கிரவாண்டி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை பகல் பத்து உற்சவம் நிறைவு பெற்றது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. காலை 5:10 மணிக்கு வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் திருவேங்கடசுவாமி கோவிலில் திருவேங்கடநாதன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை கோகுலராமானுஜ தேசிகதாசன் தலைமையில் மதன், ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !