உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மனை வழிபடும் சூரிய பகவான்: ஓமலூரில் அரிய நிகழ்வு!

அம்மனை வழிபடும் சூரிய பகவான்: ஓமலூரில் அரிய நிகழ்வு!

ஓமலூர்: சூரிய பகவான் அம்மனை வழிபடும் அரிய நிகழ்வு, ஓமலூர் பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்தது. சேலம் மாவட்டம், ஓமலூரில், தர்மபுரி மெயின் சாலையின் அருகே பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. தினமும் ஆகம விதிப்பதி மூன்றுகால பூஜை நடந்து வருகிறது. பவுர்ணமி தினத்தன்று சந்திரன் பூஜையும், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜையும் நடக்கிறது. ஓமலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பலர் அம்மனை வணங்கி செல்கின்றனர். மார்கழி மாதத்தில் மட்டும் சூரியன் உதித்ததும், அதன் ஒளி, முன் வாசல் ஜன்னல் வழியாக சென்று பெரிய மாரியம்மன் அம்மன் சிலை மீது விழுந்து, சிலை முழுவதும் பிரகாசம் ஏற்பட்டு, அம்மனை வழிபாடு செய்வதாக ஐதீகம் கூறப்படுகிறது. சூரிய பகவானே அம்மனை வழிபடும் நிகழ்ச்சியின் போது, பக்தர்கள் தரிசனம் செய்தால், குழந்தை பாக்கியம், திருமண யோகம் கிடைக்கும் என, நம்பப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் அம்மனை சூரியன் வழிபடுவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !