உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவில் ஆடிப்பெருக்கு விழா

மாசாணியம்மன் கோவில் ஆடிப்பெருக்கு விழா

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கு பண்டிகையை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வால்பாறை டி.எஸ்.பி., பழனிச்சாமி தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரமேஷ், கண்காணிப்பாளர் செந்தமிழ்செல்வன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஆழியாறு: ஆடிப்பெருக்கு முன்னிட்டு, ஆனைமலை சுற்றியுள்ள ஆழியாறு அணை, மங்கிபால்ஸ், வால்பாறை, டாப்சிலிப் போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. ஆழியாறு அணையில் சிறுவர் பூங்கா, அணைப்பகுதி போன்ற இடங்களில் காலை முதல் இரவு வரை கூட்டம் அலைமோதியது.மங்கிபால்ஸ்: ஆழியார் அணையை அடுத்த மங்கிபால்ஸில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தற்போது பெய்துவரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக அருவியில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஆழியார் அணை மற்றும் மங்கிபால்ஸ் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !