விழுப்புரம் பெருமாள் கோவிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி
ADDED :3904 days ago
விழுப்புரம்:விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பள்ளி மாணவிகளின் இசை நிகழ்ச்சி நடந்தது. வைகுண்ட ஏகாதசியை யொட்டி, விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், கடந்த 21ம் தேதி மாலை 5:00 மணிக்கு பள்ளி மாணவிகளின் இசை நிகழ்ச்சி நடந்தது. சுபஸ்ரீ மியூசிக் அகாடமி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், வீணை இயக்குதலில் மாணவிகள் ஸ்ருதிகா, பிரியதர்ஷினி, ஸ்ரீதேவி, திவ்யா ஆகியோர் பங்கேற்றனர். கர்நாடக இசை நிகழ்ச்சியில் அவந்திகா, சாந்தினி, சஞ்சய், சுபிட்ஷா, சுவிட்ஷா, ஹரிணி, சகலேஷ்வர் ஆகியோரும், பரத நாட்டியத்தில், கிருத்திகா, ஹேமா, ஸ்ரீதேவி, பவித்ரா, அமிர்தா ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுக்கு இசை ஆசிரியர்கள் கிருஷ்ணகுமாரி, வனஜா, சுமிதா ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அகாடமி தலைவி நாகலட்சுமி செய்திருந்தார்.