ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை ஆருத்ரா தரிசனம்
ADDED :3787 days ago
பாகூர்: சேலியமேடு ஜோதிலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில், நாளை 26ம் தேதி, ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. பாகூர் அடுத்துள்ள சேலியமேட்டில், திருமுறை நாயகி சமேத ஜோதி லிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் நாளை 26ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு, ஆருத்ரா அபிஷேகம் மற்றும் தரிசனம் துவங்குகிறது. தொடர்ந்து, சிவகாமி உடனுரை ஆனந்த நடராஜர் பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 6.00 மணிக்கு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.