உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசனம்!

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசனம்!

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசன நிகழ்ச்சி நடந்தது.  திருவாரூர் தியாகராஜர் கோவிலில்,பங்குனி உத்திரம்,மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் அன்று,தியாகராஜ சுவாமி,பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அளித்ததாக ஐதிகம். ஆண்டுதோறும், இக்கோவிலில் இந்நிகழ்ச்சி  சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை ஒட்டி,கடந்த 24ம் தேதி இரவு, மூலஸ்தானத்தில் இருந்து, அஜபா நடனத்துடன் ராஜநாராயணன் மண்டபத்திற்கு தியாகராஜசுவாமி எழுந்தருளினார். நேற்று இரவு, சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை, மகா அபிேஷகம் நடந்தது. காலை,6:00 மணி முதல், மதியம், 3:00 மணிவரை பாத தரிசன நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்,பாததரிசனம் செய்து பரவசம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !