பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் நடராஜ பெருமான் திருவீதி உலா!
ADDED :3605 days ago
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி கோவிலில் இருந்து நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசன விழா பிரசித்தி பெற்றது. காலை அன்னை மரகதாம்பிகை மற்றும் உற்சவர் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் வினாயகர், முருகர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் உற்சவர் ஸ்ரீநடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் சுருட்டப்பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டையில் உள்ள முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.