உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூரில் மஞ்சுளால்தரா மேளம்

குருவாயூரில் மஞ்சுளால்தரா மேளம்

நூறு இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி குருவாயூரில் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது
குருவாயூர் : ஆவணி மாதத்தை வரவேற்க, குருவாயூரில் பிரபல இசைக் கலைஞர்கள் நூறு பேர் பங்கேற்கும் நிகழ்ச்சி, வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், ஆவணி மாதத்தை வரவேற்க, "மஞ்சுளால்தரா மேளம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இவ்வாண்டுக்கான நிகழ்ச்சி, வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு, இங்குள்ள மஞ்சுளால் தரா கோவிலில் நிகழ்ச்சி துவங்கும்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, கேரள மாநிலத்தில் இருந்து மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும், இசைக் கலைஞர்கள் குருவாயூருக்கு வர உள்ளனர். மஞ்சுளால் தரா மேள நிகழ்ச்சி துவங்குவதற்கு சற்று முன்பாக, குருவாயூர் கிருஷ்ணன் கோவில் தீப தூணிற்கு முன், செண்டை மேள குருவுக்கு, தட்சணை மற்றும் செண்டை வாத்தியக் கருவியில் பயன்படுத்தும் குச்சி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !