காட்டூர் ஐயப்பன் கோவிலில் பூஜா வைபவம் துவக்கம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் காட்டூர் ஐயப்பன் பஜன் சமாஜத்தில், பத்து நாள் பூஜா வைபவம் நிகழ்ச்சிகள் துவங்கின. முதல் நாள் கணபதி ஹோமத்துடன் துவங்கி, நவக்ரஹயக்ஞம் நடந்தது. இரண்டாம் நாள் சாஸ்தா ஹோமம், மூன்றாம் நாள் பவுமான ஜபம் மற்றும் தன்வந்திரி ஹோமமும், சுயம்வர பார்வதி ஹோமமும் நடந்தது. நேற்று ருத்யுஞ்ச ஹோமம் பூஜையில் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஐயப்பனுக்கு மஹன்யாச ருத்ராபிஷேகமும், மகா தீபாராதனையும் செய்யப்பட்டது. ஹோமத்தில் பங்கேற்ற, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை சண்டி ஹோமும், நாளை மஹன்யாச ருத்ர ஜெபம் ஹோமமும், 31ல் மகாசுதர்சனயக்ஞம், ஜன., முதல் தேதி புருஷஸூக்த, ஸ்ரீஸூக்த ஜெபம் ஹோமும், அன்று மாலை திருவிளக்கு பூஜையும், 2ல் ஹரிஹர புத்ர சஹஸ்ரநாம லட்சார்சனை, 3ம் தேதி தர்ம சாஸ்தா பூஜை, புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகம் நடக்கிறது. மாலையில் தீப அலங்காரத்துடன் சுவாமி ஊர்வலம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஐயப்பன் பஜன சமாஜ குழுவினர் செய்து வருகின்றனர்.