செல்லியம்மன் கோவிலில் மார்கழி வழிபாடு!
ADDED :3582 days ago
பெண்ணாடம்: பெண்ணாடம் முக்குளம் பிடாரி செல்லியம்மன் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 7:00 மணியளவில் செல்லியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், திரவிய பொடி, இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், 8:00 மணியளவில் தீபாராதனை நடந்தது. அதேபோல், கிழக்கு வாள்பட்டறை பகுதியில் உள்ள எல்லையம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.