திருமலை உண்டியல் வருவாய் ரூ.3 கோடி
திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை அதிகரித்து உள்ளது. திருமலையில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை, தேவஸ்தானம் தினமும் கணக்கிட்டு, வங்கியில் வரவு வைக்கிறது. கன மழை காரணமாக, சில தினங்களாக, உண்டியல் வருமானம் குறைந்தது. இந்நிலையில், நான்கு நாள் தொடர் விடுமுறையால், திருமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்தது.இதனால், கடந்த சனிக்கிழமை மாலை முதல், ஞாயிறு மாலை வரை, உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில், 3.60 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்து மதம் குறித்து, பக்தர்கள் அறிந்து கொள்ள தேவஸ்தானம், சப்தகிரி என்ற மாத இதழை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வௌியிட்டு வருகிறது. கருப்பு, வெள்ளையில் வந்த இந்த இதழை, வண்ண பக்கங்களில் வௌியிிட, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதியில், விபத்து, குற்ற செயல்களை தடுக்க, நகரின் முக்கிய வளைவுகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது, திருப்பதியை சுற்றி, 180 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளன. பாதுகாப்பை அதிகரிக்க கூடுதலாக, 40 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.