உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா

விழுப்புரம் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, முத்துமாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவி லில், 34வது ஆண்டு மண்டல பூஜை நடந்தது. விழாவை யொட்டி, நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு மகா அபிஷேகம், பகல் 11:30க்கு தீபாராதணை, 11:50 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு பல வித கனிகளால் அலங்கரிக்கபட்ட ஐயப்பன் கனி தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு பஜனை பாடல்கள், 8:30க்கு தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பி.என்., தோப்பு பகுதி ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !