உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி திருமுருக பக்தர் பேரவை ஆண்டு விழா

அவிநாசி திருமுருக பக்தர் பேரவை ஆண்டு விழா

அவிநாசி: அவிநாசி திருமுருக பக்தர் பேரவை, 38ம் ஆண்டு விழா மற்றும் சுவாமி புறப்பாடு ஆகியன நேற்று நடந்தது. அவிநாசி கிழக்கு ரத வீதி காசி விநாயகர் கோவிலில் இருந்து பால் குட ஊர்வலம் துவங்கி, நான்கு ரத வீதிகள் வழியாக, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலை அடைந் தது. பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம், அன்னாபிஷேகம், அலங் கார மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. அலங்கரிக்கப்பட்ட சப் பரத்தில், மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, நாதஸ்வர இன்னிசை மற்றும் சோமனுõர் - ஊஞ்சப்பாளையம் காவடி கலைக்குழு ஆட்டம் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !