ராமநாதபுரம் ஐயப்பன் கோயில்களில் மண்டலபூஜை
கடலாடி: கடலாடி ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் மண்டல பூஜை நடந்தது. குருநாதர் கருப்பையா தலைமை வகித்தார். ஐயப்பன் உருவப்படம், பதினெட்டு படிகள் வைத்து கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. பக்தர்கள் ஐயப்பனின் பாடல்கள் பாடி வழிபட்டனர். அன்னதானம் நடந்துது. விளக்கு பூஜை நடந்தது. அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் தர்மர், மீனங்குடி ஊராட்சி தலைவர் மாரிமுத்து பங்கேற்றனர்.
சாயல்குடி: சாயல்குடியில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் நடந்த மண்டல பூஜையில் யானை மீது ஐயப்பன் உருவப்படம் வைத்து ஊர்வலமாக சென்றனர். ஆராட்டுதல், பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடந்தன.
திருவாடானை: தொண்டி, திருவாடானை சின்னக்கீரமங்கலம் ஐயப்பன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இரு முடி கட்டி சபரிமலைக்கு சென்றனர். ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி அருகே ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாலை 6 மணிக்கு சுவாமி வீதி உலா நடந்தது. ராமநாதபுரம்: காட்டுப்பிள்ளையார் கோவில் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நடந்தது. காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பஜனை, தீபாராதனை நடந்தன. பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி வீதியுலா நடந்தது. ராமநாதபுரம் கேணிக்கரை, மண்டபம், உச்சிப்புளி ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தன.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்திலுள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நடந்தது. சிறப்பு பஜனைகள், ஆராதனைகள் நடத்தன. இதையொட்டி "1008 திருவிளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தான திவான் மகேந்திரன், சற்குருநாதர் பாலகுருசாமி, செல்வநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் பங்கேற்றனர். பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகே தர்மசாஸ்தா ஸ்ரீஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு கருப்பண சாமிக்கு அபிஷேகம், திருவிளக்கு வழிபாடு நடந்தது. மாலை 6 மணிக்கு சுவாமி சர்வ அலங்காரத்துடன் வீதிஉலா சென்றார். ஐந்து முனை ரோடு அருகே ஐயப்பன் கோயிலுக்கு வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை சுவாமி வீதியுலா சென்றார். எமனேஸ்வரம் வண்டியூர் ஐயப்பன் கோயில், பரமக்குடி புண்ணியபூமி, மஞ்சள்பட்டினம் ஐயப்பன் கோயில்கள் மண்டல பூஜை நடந்தன.