மிகப்பெரிய லட்டு: ஆந்திரா சாதனை
ADDED :3581 days ago
ராஜமுந்திரி,: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, ஆந்திராவில் தயாரிக்கப்பட்ட, உலகின் மிகப்பெரிய லட்டு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ஆந்திர மாநிலம், தபேஸ்வரம் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ். இவர், ஸ்ரீபக்த ஆஞ்சனேயா சுவீட்ஸ் என்ற பலகாரக் கடையை நடத்தி வருகிறார். இந்தாண்டு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 8,369 கிலோ எடையில், பிரம்மாண்டமான லட்டை தயாரித்தார். இந்த லட்டு, செப்., 15ல், விசாகப்பட்டினத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு படைக்கப்பட்டது. உலகிலேயே, அதிக எடையில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான லட்டு என, கின்னஸ் அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கிஉள்ளது.இதுகுறித்து, வெங்கடேஸ்வர ராவ் கூறுகையில், லட்டு தயாரிப்பிற்காக, தொடர்ந்து ஐந்தாவது முறையாக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.