உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கிரிகுடி கோவிலுக்கு 3ம் தேதி பாதயாத்திரை

சிங்கிரிகுடி கோவிலுக்கு 3ம் தேதி பாதயாத்திரை

புதுச்சேரி: புதுச்சேரி லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில், 20ம் ஆண்டு புனித பாத யாத்திரை, வரும் 3ம் தேதி காலை 6.௦௦ மணிக்கு காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து புறப்படுகிறது. திருக்கோவிலுார் ஜீயர் சுவாமிகள், பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார். வைத்திக்குப்பம் வெங்கடாஜலபதி பஜனைக்கூடம், சத்தியநாராயண ராமானுஜதாசன் பஜனை குழுவினரோடு, குயவர்பாளையம் அரிஹர பஜனை மடம் சார்பில் கிருஷ்ணர் ரதமும், யாத்திரையில் உடன் செல்கிறது. கடலுார் சாலை வழியாக யாத்திரை சிங்கிரிகுடியை சென்றடைகிறது. அங்கு லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, பெருமாளுக்கு பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்படும்.

புனித யாத்திரையையொட்டி வில்லியனுார் கீழ்அக்ரஹாரம் பெரியாழ்வார் திருத்தொண்டு சபையின் பஜனை, சரண்யா பக்தி இசை, திண்டிவனம் நம்மாழ்வார் சபை ஆஷாவின் அச்சுதனும், பச்சை இலையும் என்ற தலைப்பிலான உபன்யாசம் நடைபெற உள்ளது. திருப்பாவையில் பறை என்ற தலைப்பில் திண்டிவனம் வெங்கடேச ராமானுஜதாசர், லட்சுமிநரசிம்மரும் உக்கிர நரசிம்மரும் என்ற தலைப்பில் ஜோசப் ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. நிறைவாக தஞ்சை தேவநாத ராமானுஜ தாசபாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஆன்மிக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !