வல்லபை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை
கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழா டிச., 18 ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. காலை 8 மணிக்கு யானை மீது ஐயப்பன் படம் வைத்து முத்துநாச்சியம்மன் கோயிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. குதிரைகள், மாணவிகளின் கோலாட்டம் நடந்தது. ஐயப்ப பக்தர்கள் வண்ணப்பொடிகளை உடலில் பூசியவாறு பேட்டை துள்ளலுடன் ஆடிப்பாடி சென்றனர். காலை 10 மணிக்கு உற்சவர் பல்லக்கின் மூலம் பஸ்மக்குளம் கொண்டு செல்லப்பட்டார். பின் மஞ்சள் நீரால் ஆராட்டு விழா நடந்தது. மூலவருக்கு மகா அபிஷேக, ஆராதனை, உலகநன்மைக்கான கூட்டுவழிபாடு, அன்னதானம் நடந்தன. மாலை 5 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.
சபரி உட்கார்விங் ஒர்க்ஸ் சரவணன், சக்திபுரம் முத்துக்குமார், முனியசாமி, பழனி, கொத்தனார் பாண்டி, ஐயப்பன், ஆர்.எஸ்.மங்கலம் முத்துக்கிருஷ்ணன், ரெகுநாதபுரம் முருகேசன், தேங்காய் வியாபாரி தங்கராஜ், நயினாமரைக்கன் மருங்கையா, தெற்கு கும்பரம் திருமூர்த்தி, வழக்கறிஞர் ரவிச்சந்திரன், ஈரோடு குலஒளிநாதன், வழுதூர் பூபாலன், ஏ.டி.ஜுவல்லரி தெய்வேந்திரன், நயினாமரைக்கான் ஊராட்சி தலைவர் வெள்ளையம்மாள் மாசானம், மற்றும் வல்லபை பாலன் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ், ஓட்டல் அன்னபூர்ணாஸ், ராமநாதபுரம் எஸ்.கே.எஸ்.மளிகை, தாயுமானவர் காய்கறி கடை, பார்வதி விலாஸ் வெண்ணெய், நெய் ஸ்டோர், ஜெகன் பாத்திரக்கடை, பாரதிநகர் கீர்த்தனா ஸ்டோர், குமார் கம்ப்யூட்டர் பிரஸ் நிறுனத்தினர் பங்கேற்றனர்.