தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம்
ADDED :3579 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேக ஆராதனை நடந்தது. டிச.17ல் கணபதி, சாஸ்தா ஹோமத்துடன் லட்சார்ச்சனை துவங்கியது. நேற்று காலை 10.15 மணிக்கு மூலவருக்கும், உற்சவருக்கும் மண்டலாபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றன. சந்தனக்காப்பில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் உற்சவர் திருவீதி உலா நடந்தது. ஏற்பாட்டினை ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர்,மகரஜோதி யாத்திரைக்குழுவினர் செய்தனர்.
*தாயமங்கலம் ஐயப்பன் கோயிலில்,சபரியாத்திரைக் குழு மற்றும் தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,பூஜை நடந்தது. பகல் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது.இரவு 8 மணிக்கு சுவாமி வீதி உலா நடந்தது.