அய்யப்பன் கோவிலில் லட்சார்ச்சனை
ADDED :3579 days ago
கடம்பத்துார்:கசவநல்லாத்துாரில் உள்ள தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில், வரும் 31ல் முதலாண்டு லட்சார்ச்சனையும், திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட கசவநல்லாத்துாரில் உள்ள ஏகாத்தம்மன் கோவில் வளாகத்தில் உள்ளது தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில்.இந்த கோவிலில், முதலாண்டு லட்சார்ச்சனையும், திருவிளக்கு பூஜையும், வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை 6:00 மணிக்கு, முதலாண்டு லட்சார்ச்சனையும், திருவிளக்கு பூஜையும் நடைபெறும்.தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, அய்யப்பன் பஜனை பாடல்களும், இரவு 9:00 மணிக்கு, அய்யப்பன் ஜோதி தரிசனமும் நடைபெறும்.