ஐயப்பனுக்கு மண்டல பூஜை
ADDED :3579 days ago
விழுப்புரம்: விழுப்புரம் சித்தேரிக்கரை சிவசக்தி மாரியம்மன் கோவிலில் ஐயப்பனுக்கு மண்டல பூஜைகள் நடந்தது. மண்டல பூஜையை யொட்டி, ஐயப்பனுக்கு நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதணைகள் நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு அய்யப்பன் புஷ்பங்களால் ஜோடிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு தீபாராதனை, 7:30க்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.