உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ஜன., 9ல் அனுமன் ஜெயந்தி

ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ஜன., 9ல் அனுமன் ஜெயந்தி

கரூர்: கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 1,008 ஹயக்ரீவர் விக்ரஹம் வைத்து சிறப்பு பூஜை, ஹோமங்கள் செய்யப்பட்டு நிறைவடைந்த நிலையில், அனுமன் ஜெயந்தி உற்சவம் வரும், ஜனவரி, 9ம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 29ம் ஆண்டு விழா முன்னிட்டு, லட்சுமி ஹயக்ரீவர் மஹா யாகம் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. நட்சத்திர யாகம், ராஜ மாதங்கி யாகம், ஏகதின லட்சார்ச்சனை விழா, சீதா கல்யாணம் கோலாகலமாக நடந்தது. கடந்த, 26ம் தேதி மற்றும், 27ம் தேதி சீதா கல்யாண உற்சவம் நடந்தது. ஜனவரி, 9ம் தேதி காலை, 7 மணிக்கு பசுபதி ஆஞ்சநேய சுவாமிக்கு மஹா யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், பசுபதி ஆஞ்சநேயர் திருவீதி உலா அன்று இரவு, 7 மணிக்கு நடக்கிறது. ஸர்வசாதகர் முரளி சிவாச்சாரியார் இதை நடத்தி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !