உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்- 6 : நிகரற்ற இறையச்ச பயிற்சி

ரமலான் சிந்தனைகள்- 6 : நிகரற்ற இறையச்ச பயிற்சி

எவ்வளவோ வசதி வாய்ப்புகள் உள்ள ஒருவர் கூட, நோன்பு நேரத்தில் சாப்பிடுவதில்லை. துளி தண்ணீர் கூட குடிப்பதில்லை. தொழுகை போன்ற ஒரு வணக்கத்தில் இருக்கின்ற உணர்வால் நோன்பாளி, பாவங்கள் செய்ய அஞ்சுகிறார். ரமலான் மாதத்தில் 30 நாட்களும் அவர் இந்த பயிற்சியை பெறுகிறார். எனவே நோன்பு நிகரற்ற ஒரு இறையச்ச பயிற்சியாகும்.
""நோன்பு நோற்பவர்கள் பொய்யான பேச்சுகளையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் உண்ணாமலும், பருகாமலும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.
இது மட்டுமின்றி, ""நோன்பு என்பது உணவையும் தண்ணீரையும், இதர பானங்களையும் தவிர்த்திருப்பது மட்டுமல்ல; நிச்சயமாக நோன்பு என்பது வீண் விளையாட்டுகள், வீண் பேச்சுகளை தவிர்த்திருப்பதாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது, யாரேனும் திட்டினாலோ, மடத்தனமாக நடந்து கொண்டாலோ "நான் வீண் வம்புகளில் ஈடுபடமாட்டேன் என கூறி ஒதுங்கிவிடுங்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
""நீங்கள் நோன்பிருக்கும் நாட்களில் வீணாக குரலை உயர்த்திப் பேசக்கூடாது, யாராவது சண்டைக்கு வந்தால் "நான் நோன்பாளி என கூறி ஒதுங்கி விடுங்கள் என்றும் நோன்பு காலத்தில் கடைபிடிக்க வேண்டியது பற்றி அவர்கள் விளக்கமாக சொல்லியுள்ளார்கள்.
 நோன்பு முக்கிய கடமையாகும். எல்லா வகையான பாவங்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள நோன்பு அவசியம். பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பே ரமலான் நோன்பாகும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !