உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுபதீஸ்வரர் கோவிலில் 12ல் திருக்கல்யாணம்

பசுபதீஸ்வரர் கோவிலில் 12ல் திருக்கல்யாணம்

கரூர்: கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கல்யாண விழா வரும் 12 ம் தேதி நடக்கிறது. கரூர் மஹா அபிஷேக குழு சார்பில் அலங்காரவள்ளி, சவுந்திர நாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரர் திருகல்யாண விழா நடக்கிறது. வரும் 11ம் தேதி மாலை 4 மணிக்கு கணபதி வழிப்பாட்டை தொடர்ந்து, கரூர் பெருமாள் கோவிலுக்கு பெண் வீட்டு சீர் தட்டு அழைக்க புறப்பாடு நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஆயிரக்கணக்கான சீர் தட்டுகளுடன் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலம் செல்கிறது. மாலை 7 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் பெண் வீடு புகுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 12 ம் தேதி காலை 6 மணிக்கு 108 லிட்டர் சிறப்பு பால் அபிஷேகம், காலை 6 மணி முதல் 9 மணி வரை கரூர் இசைப்பள்ளி ஆசிரியர் குமார சாமிநாதன் குழுவினரின் தேவரா இசை, காலை 9 மணி முதல் 10.30 மணி வரை திருக்கல்யாண விழா நடக்கிறது. தொடர்ந்து 11 மணிக்கு தருமை ஆதீனம் குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள் விருது வழங்குகிறார். அடுத்து திருவானைக்காவல் ரவியின் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. மாலை அம்மன் திருக்கல்யாண கோலத்தில் திருவீதி உலா, வாண வேடிக்கையுடன் நடக்கிறது. திருக்கல்யாண உற்சவசத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கரூர் மஹா அபிஷேக குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !