செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
ADDED :3582 days ago
கோபி: கோபி அளுக்குளி, செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, கடந்த, 18ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இன்று காலை கொடியேற்று விழா, இரவு, 10 மணிக்கு அம்மன் அழைத்தல் நடக்கிறது. நாளை (31ம் தேதி) காலை, 6 மணி முதல், 7 மணிக்குள் குண்டம் திருவிழா நடக்கிறது. இதை தொடர்ந்து, ௯ மணி முதல் மதியம், 12 மணி வரை அக்னி அபிேஷக ஆராதனை, மாலை, 5 மணி முதல், 6 மணி வரை அம்மன் ரத ஆரோகணம் நடக்கிறது. புத்தாண்டையொட்டி, ஜன.,௧ம் தேதி காலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அன்று மாலை ரத உற்சவம் நடக்கிறது. ஜன.,2ம் தேதி மாலை ரத உற்சவம், இரவு பரிவேட்டை, தெப்பத்தேர் நடக்கிறது. ஜன., 3ல் மஞ்சள் உற்சவம், ஜன., 6ல் மாலை, 6 மணிக்கு மறுபூஜை நடக்கிறது.