முனியப்ப சுவாமி கோவில் பக்தர்கள் நேர்த்திக் கடன்
ADDED :3582 days ago
பென்னாகரம்: பி.அக்ரஹாரம் முனியப்ப சுவாமி கோவிலில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழி, ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த பிளியனூர் அக்ரஹாரத்தில் முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் இரண்டாவது வாரம் பொங்கல் விழா நடக்கிறது. நேற்று நடந்த விழாவுக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி பக்தர்கள், விரதமிருந்து மாலை அணிந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோழி, ஆடுகளை பலியிட்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர். டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையில், போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.